51 ரன்களில் 4 விக்கெட்டை இழந்த இந்திய அணி.. அதிரடி காட்டி தென்னாப்ரிக்காவை வீழ்த்துமா?

51 ரன்களில் 4 விக்கெட்டை இழந்த இந்திய அணி.. அதிரடி காட்டி தென்னாப்ரிக்காவை வீழ்த்துமா?
51 ரன்களில் 4 விக்கெட்டை இழந்த இந்திய அணி.. அதிரடி காட்டி தென்னாப்ரிக்காவை வீழ்த்துமா?

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 250 ரன்கள் இலக்கை நிர்ணயித்துள்ளது தென்னாப்பிரிக்க அணி.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று ஆடிவருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, முதன்முதலில் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மழை பாதிப்பால் 40 ஓவர்களாக குறைப்பு:

இந்தியாவின் பிரதான அணி ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலககோப்பைக்காக ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றுவிட்ட நிலையில், ஷிகர் தவான் தலைமையிலான இளம் அணியே இந்த தொடரில் பங்குபெற்று விளையாடுகிறது. மழையின் காரணமாக தடைபட்ட போட்டி இருதரப்பிற்கும் தலா 40 ஓவர்கள் என குறைக்கப்பட்டு தாமதமாக தொடங்கப்பட்டது.

தென்னாப்ரிக்கா நிதான தொடக்கம்:

டாஸ்ஸை வென்ற இந்திய அணி கேப்டன் ஷிகர் தவன் பந்துவீச்சை தேர்ந்தெடுத்து தென்னாப்பிரிக்க அணியை பேட்டிங்க் செய்யுமாறு அழைத்தார். பின்னர் களமிறங்கிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மாலன் மற்றும் டி காக் இருவரும் சீரான தொடக்கத்தை கொடுத்தனர். மாலன் 22 ரன்களில் ஷர்துல் தாகுர் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேற, அடுத்து களமிறங்கிய கேப்டன் பவுமாவை 8 ரன்களில் போல்டாக்கி பெவிலியன் திருப்பினார் ஷர்துல் தாகுர். அடுத்து களமிறங்கிய மார்க்ரம் குல்தீப் பந்துவீச்சில் போல்டாகி 0 ரன்களில் வெளியேற, சிறப்பாக விளையாடிய டி காக் 5 பவுண்டரிகள் அடித்து 48 ரன்களில் இருந்த நிலையில் இளம் பந்துவீச்சாளரான ரவிபிஸ்னாய் பந்துவீச்சில் லெக்பை விக்கெட்டில் அவுட் ஆகி வெளியேறினார்.

மிரட்டிய க்ளாசன், மில்லர் கூட்டணி:

5ஆவது விக்கெட்டுக்கு இணைந்த க்ளாசன் மற்றும் மில்லர் கூட்டணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்சர்களுக்கு பறக்க விட்ட இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இறுதிவரை நிலைத்து நின்று விளையாடிய இந்த ஜோடி அணியை ஒரு நல்ல இலக்கை நோக்கி அழைத்து சென்றது. 139 ரன்கள் பார்ட்னர்சிப் போட்ட க்ளாசன் (74 ரன்கள்) மற்றும் மில்லர் (75 ரன்கள்) இருவரும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 40 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்து 250 ரன்களை இந்தியாவிற்கு இலக்காக நிர்ணயித்தது தென்னாப்பிரிக்க அணி.

தொடக்கத்திலே விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி:

250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில் மற்றும் கேப்டன் ஷிகர் தவான் இருவரும் அடுத்தடுத்து போல்டாகி வெளியேறினர். 8 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணி, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் சீரான ஆட்டத்தால் மீண்டு வந்த நிலையில் அணியின் ஸ்கோர் 48 ரன்கள் இருக்கும் போது ஷாம்சி பந்துவீச்சில் ருதுராஜ் வெளியேற அடுத்த ஓவரில் மஹாராஜ் பந்தில் இஷான் கிஷனும் வெளியேறினார். 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 18 ஓவர் முடிவில் 52 ரன்கள் எடுத்துது இந்திய அணி. 

பின்னர் ஷ்ரேயாஸ் பவுண்டரிகளை அடித்து ரன்களை சேர்க்க சஞ்சு சாம்சன் அவருக்கு நிதான ஆட்டத்தின் மூலம் ஒத்துழைப்பு அளித்தார். 25 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்தது. மீதமுள்ள 15 ஓவர்களில் இந்திய அணி 138 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. அதனால் டி20 ஆட்டம் போல் விளையாடினால் மட்டுமே வெற்று பெறும் நிலை உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com