இந்தியா பேட்டிங்: ஸ்ரேயாஸ் உள்ளே, ரஹானே வெளியே!
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணியிடம் இழந்த இலங்கை, அடுத்து 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒரு நாள் போட்டி தர்மசாலாவில் இன்று தொடங்கியது.
இதில் கேப்டன் விராத் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. கேதர் ஜாதவ்வுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தை சேர்ந்த இளம் வீர் வீரர் வாஷ்ங்டன் சுந்தர், ஒரு நாள் போட்டிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை.
இலங்கை அணிக்கு கேப்டனாக ஆல்ரவுண்டர் திசாரா பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். டாஸ் வென்ற அவர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்கிறது.
இந்திய அணி விவரம்:
ரோகித் (கேப்டன்), தவான், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், குல்தீப், பும்ரா, சேஹல்.