விளையாட்டு
2020 ஒலிம்பிக் விளையாட்டு அரங்கம் டோக்யோவில் திறப்பு
2020 ஒலிம்பிக் விளையாட்டு அரங்கம் டோக்யோவில் திறப்பு
2020-ஆம் ஆண்டு நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான முதல் விளையாட்டரங்கம் அதிகாரபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
ஜப்பான் நாட்டின் டோக்கியோவின் புறநகர் பகுதியில் கட்டப்பட்டுள்ள 2020-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கான விளையாட்டரங்கிற்கு தி முசாஷினோ ஃபாரஸ்ட் ஸ்போர்ட் ப்ளாசா (The Musashino Forest Sport Plaza) என பெயரிடப்பட்டுள்ளது. புதிய விளையாட்டரங்கை டோக்யோ கவர்னர் யூரிகோ கோய்கே திறந்து வைத்தார். மேலும் பாராலிம்பிக் போட்டியின் போது, சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டியும் இந்த விளையாட்டரங்கில் நடத்தப்பட உள்ளது.