வாஷிங்டன், உமேஷ் பந்துவீச்சு: விராத் கோலி மகிழ்ச்சி

வாஷிங்டன், உமேஷ் பந்துவீச்சு: விராத் கோலி மகிழ்ச்சி

வாஷிங்டன், உமேஷ் பந்துவீச்சு: விராத் கோலி மகிழ்ச்சி
Published on

வாஷிங்டன் சுந்தர், உமேஷ் யாதவ் ஆகியோரின் பந்துவீச்சு சிறப்பாக இருந்ததாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராத் கோலி கூறினார்.

பதினோறாவது ஐபிஎல் போட்டி இப்போது நடந்து வருகிறது. பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 8-வது லீக் போட்டியில் பெங்களூர்- பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராகோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி் பேட் செய்த பஞ்சாப் அணி, 19 புள்ளி 2 ஓவரில் 155 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 47, கேப்டன் அஸ்வின் 33 மற்றும் கருண் நாயர் 29 ரன்கள் எடுத்தனர். பெங்களூரு தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கிறிஸ் வோக்ஸ், குல்வந்த் கெஞ்ரோலியா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட் எடுத்தனர். 

பின்னர் ஆடிய பெங்களூரு அணி 19.3 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. டிவில்லியர்ஸ் 57 மற்றும் குயின்டன் டி காக் 45 ரன்கள் சேர்த்து  வெற்றிக்கு உதவினர். 

வெற்றிக்குப் பின் பேசிய விராத் கோலி, ‘சொந்த மைதானத்தில் முதல் போட்டி எப்போதுமே முக்கியமானது. டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தது சரியானதாக அமைந்தது. உமேஷ் யாதவ் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் பஞ்சாப் அணியின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினோம். வாஷிங்டன் சுந்தர், வோக்ஸ், கெஜ்ரோலியா ஆகியோரும் சிறப்பாக பந்துவீசினார்கள். அணியில் ஐந்து பந்துவீச்சாளர்கள் இருந்தால், நீங்கள் தேர்ந்தெடுத்து பந்துவீச வைக்கலாம். அவர்களுக்கு அதிக பொறுப்பு கொடுக்க விரும்பினோம். இந்த பிட்சில் 170 ரன்கள் எடுத்திருந்தால் நல்ல ஸ்கோராக இருந்திருக்கும். கடந்த ஆண்டை விட இந்த முறை பிட்ச் நன்றாக அமைந்திருக்கிறது. கடந்த போட்டியில் இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை தொடர்ந்து இழந்தோம். அதில் இருந்துபாடம் கற்றுக்கொண்டோம்’ என்றார். 

அஸ்வின் கூறும்போது, ’இந்தப் போட்டியில் நாங்கள் போராடிய விதம் பெருமையாக இருக்கிறது. நாங்கள் 20, 30 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். பெங்களூர் அணிக்குத்தான் அழுத்தம் இருந்தது. அவர்களிடம் டாப் வீரர்கள் இருக்கிறார்கள். சிறந்த தலைமை இருக்கிறது. நான் இந்தப் போட்டியை ரசித்தேன். பந்துவீச்சாளர்களிடம் நான் அதிகம் எதுவும் கேட்க முடியாது. மைதானத்தில் பனி அதிகமாக இருந்தது. ஆனாலும் சிறந்த பந்துவீச்சாளர்கள் எப்போதும் சிறந்தவர்கள்தான்’ என்றார்.

டிவில்லியர்ஸ் கூறும்போது, ‘அவுட் ஆகாமல் அணியின் வெற்றிக்கு உதவியது மகிழ்ச்சியளிக்கிறது. தொடக்கத்தில் பவுண்டரிகளை விளாசமல் விரக்தி அடைந்தேன். ஆனால், கடைசியில் சிக்சர், பவுண்டரிகளை அடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் தரப்பில் வாஷிங்டன், சேஹல், உமேஷ் யாதவ் சிறப்பாக பந்துவீசினார்கள். சின்னசாமி ஸ்டேடியத்தில் விளையாடுவது எப்போதும் ஸ்பெஷல்தான். கடந்த வருட தொடர் எங்களுக்கு சிறப்பானதாக அமையவில்லை. இந்த வருடத் தொடர் அப்படியிருக்காது’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com