தோனியை கிரிக்கெட்டிற்கு மடைமாற்றிய பயிற்சியாளர் பேனர்ஜி

தோனியை கிரிக்கெட்டிற்கு மடைமாற்றிய பயிற்சியாளர் பேனர்ஜி
தோனியை கிரிக்கெட்டிற்கு மடைமாற்றிய பயிற்சியாளர் பேனர்ஜி

'இவர் பந்தை ஓங்கி அடித்தால் அது சிக்ஸருக்கும், அதே பந்தை தட்டிவிட்டால் அது பவுண்டரிக்கும் பறக்கும்' என கெத்தாக சொல்வார்கள் தோனியின் ரசிகர்கள். அந்த அளவிற்கு தோனியின் ஆட்டம் களத்தில் உயிர்ப்புடன் இருக்கும்.  

இந்த சூழலில் கடந்த ஒரு வருட காலமாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்த தோனி வரவிருக்கும் ஐ.பி.எல் தொடரின் மூலம் தனது ஆட்டத்தால் அவர் மீதான விமர்சனத்திற்கு பதில் சொல்வார் என பரவலாக எதிர்பார்த்த சூழலில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார். 

சிறு வயதிலிருந்தே விளையாட்டின் மீது கொள்ளை ஆர்வம் கொண்டவர் தோனி. அக்கா ஜெயந்தி, அண்ணன் நரேந்திராவோடு வீட்டில் விளையாடி வந்த தோனிக்கு பேட்மிட்டன், புட் பால் போன்ற விளையாட்டின் மீது கொள்ளை ஆர்வம். அதன் காரணமாக தான் படித்து வந்த ஜவஹர் வித்யா மந்திர் பள்ளி அணியில் பயிற்சி பெற்று புட்பால் கோல் கீப்பராக தன் விளையாட்டு கெரியருக்கு தொடக்கப் புள்ளி போட்டு ஆட ஆரம்பித்துள்ளார்.

வட்டம், மாவட்டம், மாநிலம் என கிளப் அளவிலான புட்பால் தொடர்களில் கோல் கீப்பராக விளையாடி வந்துள்ளார். 

தோனியின் ஆட்டத்தை பார்த்து பிரமித்து போன அவர் படித்து வந்த ஜவஹர் வித்யா மந்திர் பள்ளியின் கிரிக்கெட் கோச்சான கேஷவ் பேனர்ஜீ 'நீ கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தால் அதில் நீ தான் கிங்' என சொல்லி தோனியின் பார்வையை கிரிக்கெட் பக்கமாக திருப்பியுள்ளார். 

அவர் அதை செய்யாமல் போயிருந்தால் இந்தியாவிற்கு 2011இல் உலக கோப்பை கிடைத்திருக்குமா என்பதே சந்தேகம் தான். 

கோச் பேனர்ஜியின் கட்டளைக்கு இணங்க காலை, மாலை என விக்கெட் கீப்பிங் பயிற்சியையும், பேட்டிங் பயிற்சியையும் தீவிரமாக மேற்கொண்டுள்ளார். அதன் பலனாக தன் பள்ளி கிரிக்கெட் அணியில் நிரந்தரமாக இடம் பிடித்து அசத்தினார் தோனி.

தொடர்ச்சியாக தன் அதிரடியான பேட்டிங்கின் மூலம் பந்துகளை காட்டுத்தனமாக அடித்து ரன்களை சேர்த்ததோடு, துள்ளலான விக்கெட் கீப்பிங் மூலமாகவும் ராஞ்சி நகரின் கிரிக்கெட் கிளப் அணியில் இடம்பிடித்தார் தோனி. 

‘அந்த தொடரில் அவன் ஆடிய விதமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு அவன் தயார் என நான் புரிந்து கொண்டேன்’ என்கிறார் பயிற்சியாளர் பேனர்ஜி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com