\
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் அடித்த முதல் வங்கதேச வீரர்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் அடித்த முதல் வங்கதேச வீரர்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் அடித்த முதல் வங்கதேச வீரர்
Published on

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்  போட்டியில் வங்கதேச வீரர் முஷ்ஃபிகுர் ரஹீம்  தனது சதத்தை பதிவு செய்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இன்று நடைபெற்று வரும் முதலாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக  முஷ்ஃபிகுர் ரஹீம் 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.  தென்னாப்பிரிக்க தரப்பில் ரபாடா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்  வங்கதேச வீரர் ஒருவர்  தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக பதிவு செய்த முதல் சதம் இதுவாகும். 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com