விளையாட்டு
நாளை இந்தியா-ஆஸி. கடைசி டி20 போட்டி: தொடரை வெல்லுமா இந்தியா?
நாளை இந்தியா-ஆஸி. கடைசி டி20 போட்டி: தொடரை வெல்லுமா இந்தியா?
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நாளை ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் நாளை நடைபெறுகிறது. தொடரை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 20 ஓவர் கிரிக்கெட்டில் 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியை வீழ்த்திய உற்சாகத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது. இரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை நேருக்கு நேர் விளையாடிய 15 ஆட்டங்களில் இந்திய அணி 10 முறை வெற்றி பெற்றுள்ளது.