\
FIFA World Cup 2026 to Introduce New Regulations
FIFA 2026web

FIFA 2026 | உலகக்கோப்பையில் புதிய விதிமுறைகள் அமல்!

வாயை மூடிப் பேசினால் ரெட் கார்டு, நடுவரை எதிர்த்து வெளியேறினால் அணி தோல்வி உட்பட உலகக்கோப்பையில் 8 புதிய அதிரடி விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
Published on

ஆப்பிரிக்க கோப்பையில் செனகல் அணியின் எதிர்ப்பு, பிரேசில் வீரர் வினிகஸ்க்கு எதிரான சர்ச்சைக்குரிய செய்கை என சமீபத்தில் நடந்த பல்வேறு காரணங்களை முன்வைத்து உலகக்கோப்பையில் 8 அதிரடி விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. களத்தில் மோதல் சூழலின்போது வாயை மூடிப் பேசினால் ரெட் கார்டு வழங்கப்படும். நடுவரின் முடிவை எதிர்த்து வெளியேறினால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு, அந்த அணி தோற்றதாக அறிவிக்கப்படும்.

FIFA 2026
FIFA 2026web

காலதாமதத்தைத் தவிர்க்க, த்ரோ-இன் மற்றும் கோல்-கிக்கிற்கு 5 விநாடி காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. மாற்று வீரர்கள் வெளியேற 10 விநாடிகள் மட்டுமே அவகாசம் தரப்படும். மைதானத்தில் சிகிச்சை பெறும் காயமடைந்த வீரர்களுக்குப் புதிய மருத்துவ விதிமுறைகளும், தவறான கார்டுகளைத் திருத்த விஏஆர் தொழில்நுட்ப விதிகளில் அதிரடி மாற்றங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், வீரர்களின் நலனுக்காக ஒவ்வொரு பாதியிலும் 3 நிமிடம் தண்ணீர் இடைவேளை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இறுதியாக, கோல்கீப்பர் சிகிச்சையின்போது ஆலோசனைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது மற்ற வீரர்கள் மைதான எல்லையைவிட்டு வெளியேறி பயிற்சியாளர்களுடன் ஆலோசிக்க முடியாது போன்ற புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

FIFA World Cup 2026 to Introduce New Regulations
ஜாம்பவான்களின் கடைசி உலகக்கோப்பை.. ரொனால்டோவுக்கு இறுதிவாய்ப்பு.. எதிர்பார்ப்பில் FIFA!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com