\
உலகக் கோப்பை கால்பந்து: இன்று 3 போட்டிகள்

உலகக் கோப்பை கால்பந்து: இன்று 3 போட்டிகள்

உலகக் கோப்பை கால்பந்து: இன்று 3 போட்டிகள்
Published on: 

ரஷ்யாவில் களைகட்டி வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில், இன்று 3 போட்டிகள் நடைபெறவுள்ளன.

உலகத் தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள பெல்ஜியம் அணி, தனது 2ஆவது போட்டியில் துனிசியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி மாஸ்கோவில் இந்திய நேரப்படி மாலை 5.‌30 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய போட்டியில் பெல்ஜியம் வெற்றி பெற்றால், அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துவிடும். 

ரஸ்டோவ் மைதானத்தில் நடைபெறும் எஃப் பிரிவு ஆட்டம் ஒன்றில் தென் கொரியா மற்றும் மெக்ஸிகோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின் றன. முதல் போட்டியில் ஜெர்மனியை வீழ்த்திய உற்சாகத்தில் மெக்ஸிகோ களம் காண்கிறது. இந்தப் போட்டி இரவு 8.30 மணிக்குத் தொடங்கு கிறது.

சோச்சியில் நள்ளிரவு 11.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் நடப்புச் சாம்பியனான ஜெர்மனி அணி, சுவீடனை எதிர்கொள்கிறது. தொடக்க ஆட்டத்தில் தோல்விகண்ட ஜெர்மனி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ளது. 2ஆவது வெற்றி யைப் பதிவு செய்து, நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் சுவீடன் அணி களமிறங்குகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com