இன்று தொடங்குகிறது இளையோருக்கான மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டி!

இன்று தொடங்குகிறது இளையோருக்கான மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டி!
இன்று தொடங்குகிறது இளையோருக்கான மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டி!

17 வயதிற்கு உட்பட்ட மகளிருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் செவ்வாயக்கிழமை (இன்று) தொடங்குகிறது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அமெரிக்க அணியை எதிர்கொள்கிறது.

20 நாட்கள் நடைபெறும் இந்த கால்பந்து திருவிழாவில், பன்னாடுகளைச் சேர்ந்த 16 அணிகள் பங்கேற்பு என பெரும் எதிர்ப்புகளுடன் தொடங்குகிறது. இளையோருக்கான மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியான இதில், 17 வயதிற்கு உட்பட்ட வீராங்கனைகள் பங்கேற்பர். இந்த போட்டித் தொடரை இரண்டாவது முறையாக நடத்துகிறது இந்தியா. ஒடிசா, கோவா, மகாராஷ்டிராவில் உள்ள 3 நகரங்களில் வரும் 30ஆம் தேதி வரை போட்டிகள் நடத்தப்படுகின்றன.

போட்டியில் பங்கேற்கும் 16 அணிகளும் தலா 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. அதில் அமெரிக்கா, மொராக்கோ, பிரேசில் ஆகிய அணிகளுடன் போட்டியை நடத்தும் இந்தியாவின் அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

பி பிரிவில் ஜெர்மனி, நைஜீரியா, சிலி, நியூசிலாந்து அணிகள் உள்ளன. சி பிரிவில் ஸ்பெயின், கொலம்பியா, மெக்சிகோ, சீன அணிகள் இடம் பெற்றுள்ளன. டி பிரிவில் ஜப்பான, டான்சானியா, கனடா மற்றும் பிரான்ஸ் அணிகள் உள்ளது. லீக் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாட வேண்டும். இதில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

முதல் நாளில் 3 போட்டிகள் நடைபெறுகின்றன. ஒடிசாவின் புவனேஸ்வரில் மாலை 4.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மொராக்கோ அணி, பிரேசிலை சந்திக்கிறது. அதேநேரத்தில் பி பிரிவில் நடைபெறும் ஆட்டத்தில் சிலி, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் போட்டியில் இந்திய அணி, அமெரிக்க அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com