\
உலகக்கோப்பை கால்பந்து: அமெரிக்காவுடன் மோதுகிறது இந்தியா

உலகக்கோப்பை கால்பந்து: அமெரிக்காவுடன் மோதுகிறது இந்தியா

உலகக்கோப்பை கால்பந்து: அமெரிக்காவுடன் மோதுகிறது இந்தியா
Published on: 

பதினெழு வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவின் 6 நகரங்களில் இன்று முதல் களைகட்டவுள்ளது. 
முதல் நாளில் நான்கு போட்டிகள் நடைபெறவுள்ளள. டெல்லியில் மாலை ஐந்து தொடங்கும் முதல் ஆட்டத்தில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள கொலம்பியா மற்றும் கானா அணிகள் மோதுகின்றன. 
இரவு ஏழு மணிக்குத் தொடங்கும் போட்டியில் இந்திய அணி, வலிமை வாய்ந்த அமெரிக்க அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்திய அணி அமர்ஜித்சிங் தலைமையில் களம் இறங்குகிறது. அணியில் இடம் பெற்றுள்ள 21 வீரர்களில் 8 பேர் மணிப்பூரை சேர்ந்தவர்கள். தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் இந்த போட்டியில் இடம் கிடைக்கவில்லை.

மும்பையில் ஐந்து மணிக்கு தொடங்கும் போட்டியில் நியூசிலாந்து அணி, துருக்கியை எதிர்த்து விளையாடுகிறது. இரவு ஏழு மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பராகுவே அணி, மாலி அணியை எதிர்கொள்கிறது.


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com