உலகக்கோப்பை கால்பந்து: ஸ்பெயினை பந்தாடி மகுடம் சூடிய இங்கிலாந்து
இந்தியாவில் களைகட்டிய பதினேழு வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.
பதினேழு வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நடைப்பெற்று வந்தது. இதில் இறுதிபோட்டிக்கு ஸ்பெயினும், இங்கிலாந்தும் முன்னேறின. விறுவிறுப்பு நிறைந்த இறுதிப்போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் ஸ்பெயின் அணியை ஐந்துக்கு இரண்டு என்ற கோல்கள் கணக்கில் இங்கிலாந்து அணி தோற்கடித்தது. ஆட்டத்தின் 10-வது நிமிடத்திலும், 31 நிமிடத்திலும் ஸ்பெயின் வீரர் செர்ஜியோ கோமேஸ் கோல் அடித்தார். இதனால் 44 ஆவது நிமிடம் வரை ஸ்பெயின் அணி இரண்டுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதன்பின்னர் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி குறுகிய இடைவெளிகளில் அடுத்தடுத்து ஐந்து கோல்கள் அடித்து அசத்தியது.

