பிஃபா அரையிறுதி 2: பிரான்ஸ் அணியை வீழ்த்தி மீண்டும் மேஜிக் நிகழ்த்துமா மொராக்கோ?

பிஃபா அரையிறுதி 2: பிரான்ஸ் அணியை வீழ்த்தி மீண்டும் மேஜிக் நிகழ்த்துமா மொராக்கோ?
பிஃபா அரையிறுதி 2: பிரான்ஸ் அணியை வீழ்த்தி மீண்டும் மேஜிக் நிகழ்த்துமா மொராக்கோ?

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் மொராக்கோ அணிகள் இன்று நள்ளிரவு பலப்பரீட்சை நடத்துகின்றன.

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதியில் அர்ஜென்டினா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது அரையிறுதி ஆட்டம் அல்பயத் மைதானத்தில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்குத் தொடங்குகிறது. இதில் நடப்புச்சாம்பியனான பிரான்ஸ் அணியை எதிர்த்து, ஆப்ரிக்க அணியான மொராக்கோ களமிறங்குகிறது.

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்ரிக்க அணி என்ற சிறப்பை பெற்றுள்ள மொராக்கோ, தடுப்பு ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நடப்புத் தொடரில் எதிரணியிடம் இருந்து ஒருகோல் கூட வாங்காத மொராக்கோ, இன்றைய போட்டியில் பிரான்ஸ் அணியை எதிர்கொள்ளும் வகையில் சிறப்பாக ஆயத்தமாகி வருகிறது.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் அதிக கோல்கள் அடித்துள்ள பிரான்ஸ் அணியின் எம்பாப்பே , மொராக்கோ அணிக்கு சவாலாக திகழ்வார் என்பதால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்பாப்வே’விற்கு எதிராக தனி திட்டமில்லை!

அரையிறுதி போட்டிகுறித்து பேசிய மொராக்கோ அணியின் பயிற்சியாளர் வாலிட் ரெக்ராகுய், அரையிறுதிக்கு செல்வதும் மட்டும் போதாது என்று தெரிவித்திருந்தார். மேலும் நட்சத்திர வீரரான எம்பாப்வே’விற்கான ஆயத்தம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், எம்பாப்வே ஒருவரை மட்டும் எங்களால் பார்க்கமுடியாது, ஏனெனில் பிரான்ஸ் அணியில் இருக்கும் அத்தனை வீரர்களும் சிறந்த வீரர்கள் தான் என்று கூறிய அவர், பிரான்ஸை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com