மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஒத்திவைப்பு !

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஒத்திவைப்பு !

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஒத்திவைப்பு !
Published on

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இந்தியாவில் நடைபெறவிருந்த 17 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் உ‌லகக்கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ‌உள்ள 5 நகரங்‌களில், வரும் நவம்பர் 2ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 17 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் உ‌லகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற இருந்தது‌. தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் இருப்பதால், இந்த போட்டித் தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மாற்று அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என சர்வதேச கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் ஏற்கெனவே ஒலிம்பிக், யூரோ கால்பந்து, ஐபிஎல் உள்ளிட்ட போட்டித் தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 902 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 355 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுவரை 68 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் 183 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 19 பேரும், குஜராத்தில் 9 பேரும் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் 75 வயது முதியவர் உயிரிழந்திருப்பதை அடுத்து, அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com