ஃபிஃபா பைனல்: இதுக்குலாமா பெனால்டி? ஏன் VAR செல்லவில்லை? சர்ச்சையாகும் முதல் கோல் வாய்ப்பு

ஃபிஃபா பைனல்: இதுக்குலாமா பெனால்டி? ஏன் VAR செல்லவில்லை? சர்ச்சையாகும் முதல் கோல் வாய்ப்பு
ஃபிஃபா பைனல்: இதுக்குலாமா பெனால்டி? ஏன் VAR செல்லவில்லை? சர்ச்சையாகும் முதல் கோல் வாய்ப்பு

2022 கத்தார் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது அர்ஜெண்டினா அணி.

பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையேயான கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி இரவு 8.30 மணிக்கு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

23ஆவது நிமிடத்தில் பெனால்டியை கோலாக மாற்றிய மெஸ்ஸி!

போட்டி தொடங்கிய 23ஆவது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணியின் டி மரியா கீழே விழுந்ததில், அர்ஜெண்டினா அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்திகொண்ட அர்ஜெண்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி அதை கோலாக மாற்றி தன்னுடைய அணிக்கு கோல் கணக்கை தொடக்கி வைத்தார்.

சர்ச்சைக்குரியதாக மாறிய பெனால்டி!

பந்தை துரத்தி சென்ற அர்ஜென்டினா அணியின் வீரர் டி மரியாவின் பின்னால் சென்ற பிரான்ஸின் ஒஸ்மான் டெம்பேலே, மரியாவின் மீது பெரிய அளவில் மோதவே இல்லை, இருப்பினும் தடுமாறி விழுந்த மரியாவிற்கு சாதகமாக அம்பயர் பெனால்டியை நேரடியாக வழங்கினார்.

இந்நிலையில் அந்த பெனால்டி குறித்து டிவிட்டரில் பதிவிட்டுவரும் கால்பந்து ரசிகர்கள், VARக்கு செல்லாமல் எப்படி அம்பயர் ஸ்டிரெய்ட்டாக பெனால்டிக்கு சென்றார் என்ற கேள்வியை முன்னிறுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து பெனால்டி என்ற ஹாஸ்டேக்ஸ் டிரெண்டிங்கில் முன்னிலையில் இருந்து வருகிறது.

முதல் கோலிற்கு பிறகான பிரான்ஸ் அணியின் ஆட்டம் முந்தைய போட்டிகளில் இருந்ததை விட சுமாராகவே இருந்து வருகிறது.

VAR எப்போதெல்லாம் செல்ல வேண்டும்?

அம்பயர் கவனிக்கப்படாத நேரத்திலும், மோசமான ஆஃப்சைட் முடிவுகள், டைவிங், பவுல் மற்றும் ரெட் கார்டு போன்ற முக்கியமான முடிவுகளை அம்பயர் எடுக்க ரிவ்யூ சிஸ்டமாக பார்க்கப்படுவது VAR. போட்டியின் முக்கியமான முடிவுகளுக்கு அம்பயர் வார்-க்கு செல்லுவார்.

இந்நிலையில் முதல் பெனால்டிக்கு எதிராக சென்ற அம்பயரின் கால் மோசமானதாக இருந்தது. அவர் ஏன் VARக்கு செல்லவில்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com