உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில், தொடர்ந்து மூன்றாவது முறையாக நடப்புச் சாம்பியன்கள் முதல் சுற்றோடு வெளியேறியுள்ளன.
1998ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியை நடத்திய பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. ஆனால் 2002ல் நடப்புச் சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கிய பிரான்ஸ், குரூப் சுற்றோடு நடையைக் கட்டியது.
இதேபோன்று 2006ல் ஜெர்மனியில் நடந்த போட்டியில் கோப்பையை வென்ற இத்தாலி அணி, அதற்கு அடுத்து 2010 உலகக்கோப்பை தொடரில் முதல் சுற்றோடு வெளியேறியது.
2010ஆம் ஆண்டு தென்னாப்ரிக்காவில் நடந்த உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணி, 2014ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் குரூப் சுற்றோடு வெளியேறியது.
இதேபோல், கடந்த உலகக்கோப்பை தொடரில் மகுடம் சூடி, நடப்புச் சாம்பியன் என்ற அந்தஸ்துடன் இந்தாண்டு களமிறங்கிய ஜெர்மனி அணியும் முதல் சுற்றோடு வெளியேறி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் அணிகளிள் வரிசையில் இணைந்துள்ளது.
பிரான்ஸ்: 1998ல் உலகக்கோப்பை சாம்பியன்
பிரான்ஸ்: 2002ல் குரூப் சுற்றுடன் வெளியேற்றம்
=====
இத்தாலி: 2006ல் உலகக்கோப்பை சாம்பியன்
இத்தாலி: 2010ல் குரூப் சுற்றுடன் வெளியேற்றம்
====
ஸ்பெயின்: 2010ல் உலகக்கோப்பை சாம்பியன்
ஸ்பெயின்: 2014ல் குரூப் சுற்றுடன் வெளியேற்றம்
======
ஜெர்மனி: 2014ல் உலகக்கோப்பை சாம்பியன்
ஜெர்மனி: 2018ல் குரூப் சுற்றுடன் வெளியேற்றம்