\
சென்னை வெப்பம்... ஜேம்ஸ் பாக்னர் அவதி!

சென்னை வெப்பம்... ஜேம்ஸ் பாக்னர் அவதி!

சென்னை வெப்பம்... ஜேம்ஸ் பாக்னர் அவதி!
Published on

ஐபிஎல் அனுபவம் எங்கள் அணி வீரர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் ஜேம்ஸ் பாக்னர் கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’பல மாதங்களாக காயம் காரணமாக அணிக்கு திரும்பாமல் இருந்தேன். அந்த காலகட்டங்கள் கடினமானது. கடுமையான பயிற்சிக்குப் பிறகு அணிக்கு திரும்பி இருக்கிறேன். இப்போது உற்சாகமாக இருக்கிறேன். எங்கள் அணியின் பெரும்பாலான வீரர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாடி இருக்கிறார்கள். அந்த அனுபவம் இந்த தொடரில் சாதிக்க உதவியாக இருக்கும். சமீபகாலமாக ஒரு நாள் போட்டிகளில் இந்தியா அதிகமாக விளையாடி இருக்கிறது.  இந்திய அணி இப்போது சிறந்த நிலையில் இருக்கிறது. அதனால், இந்த தொடர் ஆஸ்திரேலியாவுக்கு சவாலாக இருக்கும். சென்னையில் வெப்பம் அதிகம். அதை சமாளிப்பதுதான் கஷ்டமாக இருக்கிறது’ என்றார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com