\
தோனி என்ன செய்யப்போகிறார்!... ரசிகர்கள் ஆவல்

தோனி என்ன செய்யப்போகிறார்!... ரசிகர்கள் ஆவல்

தோனி என்ன செய்யப்போகிறார்!... ரசிகர்கள் ஆவல்
Published on

தோனி டி20 கிரிக்கெட்டில் சிறந்த வீரரா என்பதில் சந்தேகம் இருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கூறியதிலிருந்து ரசிகர்களின் கவனம் தோனியின் பக்கம் திரும்பியுள்ளது.

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக தோனி விளையாடி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தோனி குறித்து கங்குலி கருத்து தெரிவித்திருந்தார். 20 ஓவர் போட்டியில் தோனி சிறந்த வீரரா என்பதில் சந்தேகம் இருக்கிறது. அவர் சிறந்த 20 ஓவர் கிரிக்கெட் வீரர் என்று உறுதியாக கூற முடியாது என கூறியிருந்தார். இதுகுறித்து அவர் எந்த கருத்து தெரிவிக்கவில்லை. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் தோனி பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை.

தோனி பல தருணங்களில் அவரது ஆட்டம் குறித்து எழும் விமர்சனங்களுக்கு தனது பேட்டிங் மூலம் பதில் சொல்வார். எனவே அவரது ரசிகர்கள் இனி வரும் ஐபிஎல் போட்டிகளில் அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். இன்று நடைபெறும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com