\
“எங்கள் வாழ்க்கையில் விரைவில் புதிய நபர்”- ஹர்திக் பாண்ட்யா உருக்கம்

“எங்கள் வாழ்க்கையில் விரைவில் புதிய நபர்”- ஹர்திக் பாண்ட்யா உருக்கம்

“எங்கள் வாழ்க்கையில் விரைவில் புதிய நபர்”- ஹர்திக் பாண்ட்யா உருக்கம்
Published on: 

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்ட்யா, தான் விரைவில் தந்தையாக உள்ள செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நிலையில் அதற்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உட்பட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


இந்திய அணியின் ஆல்ரவுண்டர் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா. இவருக்கும் செர்பியா நடிகையுமான நடாஷாவுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன் பின்னர் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் நடாஷா தற்போது கர்ப்பமாகியுள்ளார். இந்தச் செய்தியை ஹர்திக் பாண்ட்யா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள பதிவில் “ நடாஷாவுக்கும் எனக்குமான இந்த வாழ்கைப் பயணம் மிக சிறப்பாக அமைந்துள்ளது. அதை இன்னும் சிறப்பாக்குவதற்கு மற்றொரு நபர் எங்களது வாழ்கையில் மிக விரைவில் வர இருக்கிறார். எங்களது வாழ்வின் இந்தக் கட்டம் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது. உங்களது ஆசிகளும் வாழ்த்துக்களும் எங்களுக்குத் தேவை” என குறிப்பிட்டு ஹர்திக் பாண்ட்யா தனது காதலி நடாஷாவுடன் இருந்த புகைப்படத்தை இணைத்திருந்தார்.

இதனையடுத்து ஹர்திக் பாண்டியாவிற்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com