‘அடுத்து ஆரம்பிச்சுட்டாங்க’.. ஸ்டேடியத்தில் ஷமியை அதிரவைத்த விஜய் ரசிகர்கள்

‘அடுத்து ஆரம்பிச்சுட்டாங்க’.. ஸ்டேடியத்தில் ஷமியை அதிரவைத்த விஜய் ரசிகர்கள்

‘அடுத்து ஆரம்பிச்சுட்டாங்க’.. ஸ்டேடியத்தில் ஷமியை அதிரவைத்த விஜய் ரசிகர்கள்
Published on

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், நடிகர் விஜயின் ‘பீஸ்ட்’ திரைப்படம் குறித்த அப்டேட்டை கேட்டு ரசிகர்கள் அதிரவைத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் நடிப்பில் உருவான ‘வலிமை’ திரைப்படம் நீண்ட நாள் எதிர்பார்ப்புக்குப்பின், கடந்த 24-ம் தேதி வெளியானது. படம் வெளியாவதற்கு முன்பு, கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித் ரசிகர்கள், பொது இடங்களில் பிரபலங்களிடம் ‘வலிமை’ பட அப்டேட் கேட்டு வந்த விஷயம் வைரலானது. 

குறிப்பாக கடந்த ஆண்டு சென்னை சேப்பாக்கத்தில், இந்தியா - இங்கிலாந்து இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், பீல்டிங் செய்துகொண்டிருந்த இங்கிலாந்து ஆல் ரவுண்டர் மொயீன் அலியிடம், அஜித் ரசிகர்கள் ‘வலிமை’ பட அப்டேட் கேட்டது வைரலானது. இதேபோல், இந்திய அணி வீரர் அஷ்வினிடமும் அஜித் ரசிகர்கள் ‘வலிமை’ பட அப்டேட் கேட்டனர்.

இந்நிலையில், இலங்கைக்கு எதிராக பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வீரர் முகமது ஷமிடம் விஜய் ரசிகர்கள் ‘பீஸ்ட்’ பட அப்டேட் கேட்டது வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பீஸ்ட்’. இந்தப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க, செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

சமீபத்தில் இந்தப்படத்திலிருந்து வெளியான அரபிக் குத்து பாடல், யூ-டியூப்பில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. அடுத்த மாதம் ‘பீஸ்ட்’ படம் வெளியாக உள்ள நிலையில், இன்னும் டீசர் வெளியாகவில்லை. இந்நிலையில், நேற்று நடந்த 2-ம் நாள் டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி வீரர் முகமது ஷமி பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது, ‘ஷமி பாய், ‘பீஸ்ட்’ அப்டேட் என்று ரசிகர்கள் கேட்ட சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com