தோனி வாசிக்க! பிராவோ, ஹர்பஜன் ஆட்டம் போட! உற்சாகத்தில் சென்னை அணி

தோனி வாசிக்க! பிராவோ, ஹர்பஜன் ஆட்டம் போட! உற்சாகத்தில் சென்னை அணி

தோனி வாசிக்க! பிராவோ, ஹர்பஜன் ஆட்டம் போட! உற்சாகத்தில் சென்னை அணி
Published on

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ளது. இரண்டு வருட தடைக்கு பின்னர் சென்னை அணி மீண்டும் களமிறங்குவதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். அணிக்கு தோனி, ரெய்னா,ஜடேஜா திரும்பியுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.சென்னை அணிக்கு விசில் போட ரசிகர்கள் தயாராகிவிட்டனர். போட்டிக்கு முன்னரே ரசிகர்களை உற்சாகப்படுத்த முடிவு செய்த சென்னை அணி வீரர்களை வைத்து விளம்பரம் செய்ய துவங்கிவிட்டனர்.

சென்னை அணி தனது விளம்பர சூட்டிங்கில் பட்டையை கிளப்புகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோக்களும். போட்டோக்களும் வெளியாகியுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஜெர்சியை அணிந்துள்ள இளம் வீரர்கள் மஞ்சள் நிற ஆட்டோவில் இருந்து குட்டிக்கரணம் அடிக்கின்றனர். அப்போது மற்றொரு ஆட்டோவில் வரும் ஜடேஜா, பிராவோ ,ஹர்பஜன்சிங், முரளிவிஜய் போன்ற வீரர்கள் குத்தாட்டம் போடுகின்றனர்.

மற்றொரு பதிவில் தல தோனி ஒரு பந்தை கேட்ச் செய்கிறார். முரளிவிஜய், ரெய்னா, ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் ஓடிவந்து தோனி பாராட்டுகின்றனர்.பிறகு ஐபிஎல் கோப்பை போன்ற மாதிரியை கையில் தூக்கிக்கொண்டு உற்சாகமாக செல்வது போன்று படமாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மேலும் ஒரு புகைப்படம் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.அதில் ரெய்னா, தோனி, ஜடேஜா மூவரும் நாதஸ்வரம் வாசித்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com