\
இலங்கையுடன் தோல்வி: பாக். கேப்டன் கட்- அவுட்டை தாக்கி உடைக்கும் ரசிகர்- வைரல் வீடியோ

இலங்கையுடன் தோல்வி: பாக். கேப்டன் கட்- அவுட்டை தாக்கி உடைக்கும் ரசிகர்- வைரல் வீடியோ

இலங்கையுடன் தோல்வி: பாக். கேப்டன் கட்- அவுட்டை தாக்கி உடைக்கும் ரசிகர்- வைரல் வீடியோ
Published on

இலங்கை அணியுடன் டி-20 தொடரில் படு தோல்வி அடைந்ததால், ஆவேசமடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ஒருவர், கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவின் கட் அவுட்டை மிதித்து உடைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடியது. 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை, இலங்கை அணியிடம் இழந்தது பாகிஸ்தான். அதோடு மூன்று போட்டிகளில் அந்த அணி, ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.  

இலங்கையின் முன்னணி வீரர்கள் பங்கேற்காத நிலையில், இரண்டாம் நிலை வீரர்கள் பங்கேற்ற போட்டியை கூட வெல்ல முடியவில்லையே என்று, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள், கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவை கடுமையாக விமர்சித்திருந்தனர். 

’பொறுப்பை சரியாக செயல்படுத்தாத அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும்’ என்றும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் ரசிகர் ஒருவர் ஆத்திரத்தில், சர்ஃபராஸ் அகமதுவின் கட் அவுட்டை ஆவேசமாகத் தாக்கி உடைக்கும் காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com