இரட்டை சதம் அடித்த முதல் பாக். வீரர்: குவியும் வாழ்த்து, நனையும் பஹர்!

இரட்டை சதம் அடித்த முதல் பாக். வீரர்: குவியும் வாழ்த்து, நனையும் பஹர்!
இரட்டை சதம் அடித்த முதல் பாக். வீரர்: குவியும் வாழ்த்து, நனையும் பஹர்!

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் பஹார் ஜமான் 210 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். சர்வதேச அளவில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த வீரர்கள் என்ற சாதனையையும் பாகிஸ்தானின் இமாம்-உல்-ஹக், பஹர் ஜமான் ஜோடி படைத்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் ஆடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் மூன்று போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான், நேற்று நான்காவது போட்டியில் விளையாடியது. சம்பள பிரச்னை காரணமாக முன்னணி வீரர்கள் இல்லாததால் இரண்டாம் நிலை வீரர்களை வைத்து அந்த அணி விளையாடுகிறது.

புலவாயோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான், பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இமாம்-உல்-ஹக், பஹர் ஜமான் ஜோடி தொடக்க வீரர்களாக களம் இறங்கியது. தொடக்கத்தில் இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. இந்த ஜோடியை பிரிக்க ஜிம்பாப் வே வீரர்களால் முடியவில்லை. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 304 ரன்கள் எடுத்தது. இமாம் உல் ஹக் 113 ரன்களில் அவுட் ஆனார். சர்வதேச அளவில் பாகிஸ்தான் ஜோடி எடுத்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஸ்கோர் இதுதான். 

அபாரமாக ஆடிய பஹர் ஜமான் 47வது ஓவரில் இரட்டை சதம் அடித்தார். இதன் மூலம் 47 ஆண்டுகால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை படைத்தார். இரட்டை சதம் அடித்தவர்களின் பட்டியலில் 6 வது வீரராக அவர் இணைந்தார். பஹர் ஜமான் 156 பந்துகளில் 210 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அசிப் அலி 22 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார். 

இதையடுத்து பாகிஸ்தான் ரசிகர்கள் இதைக் கொண்டாடி வருகின்றனர். பஹர் ஜமானுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிதி கூறும்போது, ‘உலக அளவில் சிறந்த தொடக்க ஆட்டக்காரராக மாறியிருக்கிறீர்கள் பஹர். அதற்கான தகுதி உங்களிடம் இருக் கிறது’ என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா, ’இப்போது நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். எழுந்து நின்று வாழ்த்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து வீரர் பிரெண்டல் மெக்குலம், ‘சிறப்பான சாதனை சகோதரா, வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார். வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி, முகமது ஹபீஸ் உட்பட பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com