தோனி பாராட்டவில்லை... பாக். தொடக்க ஆட்டக்காரர் வருத்தம்!

தோனி பாராட்டவில்லை... பாக். தொடக்க ஆட்டக்காரர் வருத்தம்!

தோனி பாராட்டவில்லை... பாக். தொடக்க ஆட்டக்காரர் வருத்தம்!
Published on

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் சதமடித்த போது இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி பாராட்டாதது வருத்தமளிப்பதாக பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபகர் ஜமன் கூறியுள்ளார். 

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் ஃபகர் ஜமனின் சதத்தின் உதவியால் வென்ற பாகிஸ்தான் அணி, முதல்முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை கையில் ஏந்தியது. இறுதிப் போட்டி குறித்து பாகிஸ்தான் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த ஜமன், ’நான் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த போது இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி உள்ளிட்ட இந்திய அணியின் மற்ற வீரர்கள் என்னை அவுட் ஆக்குவது குறித்தே பேசிக்கொண்டிருந்தனர். அதனால், நான் சதமடித்தபோது அவர்கள் அதனைக் கண்டுகொள்ளமாட்டார்கள் என்று நினைத்தேன். நான் சதமடித்த போது ஆச்சர்யமாக விராத் கோலி கைகளைத் தட்டி பாராட்டு தெரிவித்தார். ஆனால், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி, பாராட்டவில்லை என்பது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது’என்று தெரிவித்தார்.       
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com