இந்தியாவுக்கு எதிராக சளைக்காமல் ரன் அடிக்கும் டூபிளிசிஸ்

இந்தியாவுக்கு எதிராக சளைக்காமல் ரன் அடிக்கும் டூபிளிசிஸ்

இந்தியாவுக்கு எதிராக சளைக்காமல் ரன் அடிக்கும் டூபிளிசிஸ்
Published on

தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் டூபிளிசிஸ் இந்திய அணிக்கு எதிராக தொடர்ந்து சிறப்பாக ரன்கள் சேர்த்து வருகிறார். 

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி டர்பன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் டூபிளிசிஸ் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். டூபிளிசிஸ் ஒரு கேப்டனாக பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

27.5 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்து தடுமாறியது. அந்த நேரத்தில் டூபிளிசிஸ் நிதானமாக விளையாடி விக்கெட் விளாமல் பார்த்துக் கொண்டதோடு, ரன்களையும் சீரான வேகத்தில் சேர்த்தார். கடைசி ஓவர் வரை விளையாடி சதமடித்தார். 112 பந்துகளில் 120 ரன்கள் குவித்து 49.2வது ஓவரில் ஆட்டமிழந்தார். டூபிளிசிஸ் ஆட்டத்தால் தென்னாப்பிரிக்கா அணி 269 ரன்கள் குவித்தது. 

டூபிளிசிஸ் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்தியாவுக்கு எதிராக கடைசி 8 ஆட்டங்களில் முறையே 55, 62, 51, 60, 17, 133*, 36, 120(இன்று) ரன்கள் குவித்துள்ளார். அதேபோல், டூபிளிசிஸ் கடைசியாக விளையாடிய அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பாகவே ரன்களை குவித்து வருகிறார். தனது கடைசி 11 இன்னிங்சில் 81, 135*, 0, 91*, 62, 0, 63, 48, 8, 2, 120 ரன்கள் குவித்துள்ளார். ஒரு கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் டூபிளிசிஸ் அசத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com