”பாகிஸ்தானுக்கு எதிராக இதை மட்டும் செய்யாதீங்க”.. இந்திய அணிக்கு நிஸி. வீரர் எச்சரிக்கை

”பாகிஸ்தானுக்கு எதிராக இதை மட்டும் செய்யாதீங்க”.. இந்திய அணிக்கு நிஸி. வீரர் எச்சரிக்கை
”பாகிஸ்தானுக்கு எதிராக இதை மட்டும் செய்யாதீங்க”.. இந்திய அணிக்கு நிஸி. வீரர் எச்சரிக்கை

ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானை வீழ்த்த இந்தியா என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கியுள்ளார் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ். 

இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம்,  இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் மோதும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை (ஆக.27) முதல் செப்டம்பர் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் மோதும் அணிகள் ஆட்டம் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறுவதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கடைசியாக கடந்த டி20 உலகக் கோப்பையின்போது இரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்தபோது, இந்தியா 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா செயல்படுமா என்பதை காண உலகம் முழுவதும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்

இந்நிலையில் பாகிஸ்தானை வீழ்த்த இந்தியா என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர், வர்ணனையாளர் ஸ்காட் ஸ்டைரிஸ் பேசியுள்ளார். பேட்டி ஒன்றில் அவர், ''டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி மிகவும் வலுவாக உள்ளது. கடைசியாக நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில்  இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் தோல்வியடைந்தது. ஆனால் இந்த ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் உட்பட அனைத்து அணிகளையும் வீழ்த்தும் திறனை இந்திய அணியினர் பெற்றுள்ளனர்.  

இருப்பினும் இந்திய அணி அதிரடியாக ஆடினாலும் போட்டியை எப்படி அணுகுவது என்ற தெளிவு இல்லை. பாகிஸ்தானின் துவக்க ஜோடியை பிரிப்பது இந்தியாவும் பெரிய சவாலாக இருக்கப் போகிறது. மேலும் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்களை நம்பினால், அது பாகிஸ்தானுக்கு சாதகமாக அமையும்; '' என்று ஸ்காட் ஸ்டைரிஸ் கூறியுள்ளார்.

முக்கியமாக இந்திய வீரர்கள் தடுப்பு ஆட்டத்தை மேற்கொள்ளக் கூடாது என ஸ்டைரிஸ் எச்சரித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com