''காலம்தான் ஓடுது; ஆனா அவங்க....'' - பதான், கைஃபை பாராட்டித் தள்ளும் கிரிக்கெட் ரசிகர்கள்!

''காலம்தான் ஓடுது; ஆனா அவங்க....'' - பதான், கைஃபை பாராட்டித் தள்ளும் கிரிக்கெட் ரசிகர்கள்!

''காலம்தான் ஓடுது; ஆனா அவங்க....'' - பதான், கைஃபை பாராட்டித் தள்ளும் கிரிக்கெட் ரசிகர்கள்!
Published on

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான வேல்டு சீரியஸ் தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. நேற்றையப் போட்டியில் இந்திய லெஜண்ட்ஸ் மற்றும் இலங்கை லெஜண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய லெஜண்ட்ஸ் அணி முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தது. இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது.

139 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய லெஜண்ட்ஸ் அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக சச்சின், சேவாக் களமிறங்கினர். சச்சின் தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே ஜமிந்தா வாஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, அதிரடி ஆட்டக்காரரான சேவாக் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

யுவராஜ் சிங்கும் ஒரு ரன்னில் நடையைக் கட்டினார். முகமது கைஃப் மட்டும் சற்று நேரம் நிலைத்து ஆடி 46 ரன்கள் எடுத்தார். அவர் ஆட்டமிழந்த பின்பு வெற்றி வாய்ப்பு குறைந்தது. நிச்சயம் இந்திய லெஜண்ட்ஸ் அணி தோல்வியை சந்திக்கும் என்றே கருதப்பட்டது. ஆனால் இறுதியில், இர்பான் பதான் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தார். குறிப்பாக கடைசி 3 ஓவர்கள் முக்கியமாக பார்க்கப்பட்டது.

அதில் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசினார். வெற்றியை நோக்கி இந்திய லெஜண்ட்ஸ் அணி பயணித்தது. இர்பான் பதான் 31 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். தோல்வி நிலையில் இருந்த இந்தியாவை அதிரடி ஆட்டத்தின் மூலம் வெற்றியடையச் செய்த பதானை ரசிகர்கள் இணையத்தில் பாராட்டி வருகின்றனர்.

பேட்டிங் மட்டுமின்றி பதானின் பந்துவீச்சையும் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். ஸ்விங் செய்வதில் பதான் கெட்டிக்காரர் என்றும், பல வருடங்கள் கழித்து பந்துவீசினாலும் அவரது ஸ்விங்கில் எந்த மாற்றமும் இல்லை என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல முகமது கைஃப் சிறந்த பீல்டர் என்பது அனைவருக்கும் தெரியும், அது இன்றளவும் மாறவில்லை என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com