“கோலி கூட இப்படி விளையாடி நான் பார்த்ததில்லை” - ரோகித்தை புகழ்ந்த சேவாக்

“கோலி கூட இப்படி விளையாடி நான் பார்த்ததில்லை” - ரோகித்தை புகழ்ந்த சேவாக்
“கோலி கூட இப்படி விளையாடி நான் பார்த்ததில்லை” - ரோகித்தை புகழ்ந்த சேவாக்

விராட் கோலி கேப்டனாக இருந்தபோது கூட, அவர் ரோகித் அளவு அதிரடியாக விளையாடி தான் பார்த்ததில்லை என ரோகித் ஷர்மாவை வீரேந்தர் சேவாக் புகழ்ந்துள்ளார்.

இந்தியா-பங்களாதேஷ் இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் ஷர்மா ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். ஒரு கட்டத்தில் பங்களாதேஷ் பந்துவீச்சை அவர் வானத்தில் பறக்கவிட்டார்.

43 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 85 ரன்கள் விளாசினார். இதில் 6 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கும். இவரது அதிரடியால் இந்திய அணி எளிமையான வெற்றியை பதிவு செய்தது. இந்தப் போட்டி ரோகித் ஷர்மாவின் 100-வது டி20 போட்டியாகும். அத்துடன் நேற்று அவர் கேப்டனாக விளையாடி இருந்தார்.

இதுதொடர்பாக பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக், “ஒரே ஓவரில் 3-4 சிக்ஸர்கள் அடிப்பதும், 45 பந்துகளில் 80-90 ரன்கள் விளாசுவதும் ஒரு கலை. விராட் கோலி கேப்டனாக விளையாடியபோது, அவரிடம் கூட ரோகிஷ் காட்டிய அதிரடி போன்று ஒரு ஆட்டத்தை பார்த்ததில்லை” என்று குறிப்பிட்டார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com