விளையாட்டு
கால்பந்து ஐரோப்பிய சாம்பியன்ஸ்: மான்செஸ்டர் சிட்டி அணி ஹாட்ரிக் வெற்றி
கால்பந்து ஐரோப்பிய சாம்பியன்ஸ்: மான்செஸ்டர் சிட்டி அணி ஹாட்ரிக் வெற்றி
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சொந்த மண்ணில் நடந்த போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி இரண்டுக்கு - ஒன்று என்ற கோல் கணக்கில் நபோலி அணியை வென்றது. ரகீம் ஸ்டெர்லிங், கேப்ரேல் ஜீசஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து மான்செஸ்டர் சிட்டி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் தொடரில் ஹாட்ரிக் வெற்றியை மான்செஸ்டர் சிட்டி அணி பதிவு செய்தது.

