யூரோ கோப்பை: விரட்டிய சுவிஸ், ஈடுகொடுத்த வேல்ஸ்...- டிராவில் முடிந்த போட்டியின் அம்சங்கள்

யூரோ கோப்பை: விரட்டிய சுவிஸ், ஈடுகொடுத்த வேல்ஸ்...- டிராவில் முடிந்த போட்டியின் அம்சங்கள்
யூரோ கோப்பை: விரட்டிய சுவிஸ், ஈடுகொடுத்த வேல்ஸ்...- டிராவில் முடிந்த போட்டியின் அம்சங்கள்

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற சுவிட்சர்லாந்து, வேல்ஸ் அணிகள் மோதிய போட்டி டிராவில் முடிந்தது.

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இத்தாலி அணியும் துருக்கி அணியும் பலப்பரிட்சை நடத்தியது. இதில், இத்தாலி அணி 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தனது புள்ளிக் கணக்கை துவங்கியுள்ளது.

இந்நிலையில், இன்று மூன்று போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள சுவிட்சர்லாந்து அணியும் வேல்ஸ் அணியும் விளையாட உள்ளது. இரண்டாவது போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள டென்மார்க் அணியும் பின்லாந்து அணியும் பலப்பரிட்சை நடத்துகிறது. அதேபோல மூன்றாவதாக நடைபெறும் ஆட்டத்தில் பெல்ஜியம் அணியும் ரஷ்யா அணியும் களம் காண்கின்றன.

இன்று நடைபெற்ற முதல் போட்டியில் சுவிட்சர்லாந்து அணியும் வேல்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்தியது. ஆட்டம் தொடங்கியது முதலே சுவிட்சர்லாந்து அணியின் கையே ஓங்கியிருந்தது. தாக்குதல் ஆட்டத்தை தொடர்ந்து சுவிட்சர்லாந்து அணியால் தடுப்பாட்டத்தில் ஈடுபட்ட வேல்ஸ் அணியின் தடுப்பு ஆட்டக்காரர்களை உடைத்து உள்ளே சென்று கோல் அடிக்க முடியவில்லை.

ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் வேல்ஸ் அணியின் முன்கள ஆட்டக்காரர் மோர் அடித்த பந்து கோலாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுவிட்சர்லாந்து கோல்கீப்பர் அற்புதமாக தடுத்தார். அதன் மூலம் கிடைத்த கார்னர் வாய்பை பயன்படுத்திய கோலாக்க எடுத்த முயற்சியில் வேல்ஸ் அணியின் முன்கள ஆட்டக்காரர் மோருக்கு காயம் ஏற்பட்டதால் சிறிது நேரம் ஆட்டம் தடைபட்டது.

இதையடுத்து தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் செப்ரவிக் மைதானத்தின் பாதியில் கிடைத்த பந்தை அற்புதமாக கடத்திச் சென்றார். ஆனால் கோலாக்க தவறிவிட்டார். ஆட்டத்தின் 34 வது நிமிடத்தில் வேல்ஸ் அணியின் ஜேம்ஸ் மின்னல் வேகத்தில் எடுத்துச் சென்ற பந்தை சுவிட்சர்லாந்து தடுப்பு ஆட்டக்காரர் முரட்டு ஆட்டம் மூலம் மஞ்சள் அட்டை வாங்கினார்.

முதல்பாதியில் சுவிட்சர்லாந்து அணி சிறப்பான ஆடினாலும், வேல்ஸ் அணியின் தடுப்பு ஆட்டக்காரர்களை மீற கோல் அடிக்க முடியவில்லை. இந்நிலையில் முதல் பாதியில் இரண்டு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் சமனில் முடிந்தது.

இரண்டாவது பாதியை தொடர்ந்து விளையாடிய இரண்டு அணிகளும் ஆட்டம் தொடங்கியது முதலே தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். மிகவும் விறு விறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் 55 வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணியின் முன்கள ஆட்டக்காரர் எம்போலோ தனது அணிக்கான முதல் கோலை அடித்தார். இதையடுத்து சுவிட்சர்லாந்து அணி தனது கோல் கணக்கை தொடங்கியது.

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் விறு விறுப்பு கூடியது. இரண்டு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இரண்டு அணியின் கோல் கீர்ப்பர்களும் தடுத்தனர். தொடர்ந்து நடைபெற்ற தாக்குதல் ஆட்டத்தின் 70 வது நிமிடத்தில் வேல்ஸ் அணியின் முன்கள ஆட்டக்காரர் மோர் தனக்கு கிடைத்த வாய்ப்பை தலையால் முட்டி கோலாக்கினார். இதையடுத்து இரண்டு அணிகளும் 1:1 என்ற கோல் கணக்கில் சம நிலையில் இருந்தது.

சுவிட்சர்லாந்து அணியின் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய கேவ்ரநோவிக் 84வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஆனால் நடுவருக்கு ஆப்-சைடு சந்தேகம் வந்ததால் டிவியில் பார்க்கப்பட்டது. பின்னர் அது ஆப்-சைடு என உறுதியானதை அடுத்து கேவ்ரநோவிக் அடித்த கோல் இல்லை என நடுவரால் அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இரண்டு அணிகளும் கோல் அடிக்க கடுமையான மோதின. ஆனால் ஆட்டம் முடியும்வரை இரண்டு அணிகளும் கோல் அடிக்காததால் 1:1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. வெற்றிபெறுவோம் என்ற முனைப்புடன் விளையாடிய சுவிட்சர்லாந்து அணி சோகத்துடனும், டிரா செய்து விட்டோம் என்ற சந்தோஷத்தில் வேல்ஸ் அணியும் களத்தில் இருந்து வெளியே சென்றன.

- எம்.கலீல்ரஹ்மான்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com