யூரோ கோப்பையும் கிறிஸ்டியானோ ரொனால்டோவும்... பல கோணங்களில் அடித்த 11 கோல்கள்!

யூரோ கோப்பையும் கிறிஸ்டியானோ ரொனால்டோவும்... பல கோணங்களில் அடித்த 11 கோல்கள்!
யூரோ கோப்பையும் கிறிஸ்டியானோ ரொனால்டோவும்... பல கோணங்களில் அடித்த 11 கோல்கள்!

யூரோ கோப்பை கால்பந்து போட்டிகளில் 11 கோல் அடித்து அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடம் பிடித்துள்ளார்.

"கிறிஸ்டியானோ ரொனால்டோ பேரைக் கேட்டாலே கால்பந்து அரங்கம் அதிருதுல்ல..." - கால்பந்து விளையாட்டில் பல சாதனைகள் படைத்து சரித்திரத்திற்கு சொந்தக்காரர். இப்படியும் பந்தை பாஸாக்க முடியுமா என ரசிகர்களின் புருவத்தை உயரவைத்தவர். கால்பந்தில் தனக்கென தனி பாணியை உருவாக்கி எதிரணியிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் போர்ச்சுகல் அணியன் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டாவின் சாதனைகளை சாதாரணமாக சொல்லிவிட முடியாது. யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் அவர் படைத்துள்ள சாதனையை இங்கு பார்க்கலாம்.

பரபரப்புக்கும் விறு விறுப்புக்கும் பஞ்சமில்லாத யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் எப் பிரிவில் பலம் வாய்ந்த ஹங்கேரி, போர்ச்சுகல், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நான்கு அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ் அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இதையடுத்து நடைபெற்ற போட்டியில் ஹங்கேரி போர்ச்சுகல் அணிகள் பலப்பரிட்சை நடத்தியது. இதில் சம பலம் வாய்ந்த இரண்டு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. கால்பந்து உலகின் சிறந்த ஆட்டக்காரராக அறியப்பட்ட போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஹங்கேரி அணியின் தடுப்பு ஆட்டத்தை தகர்த்து உள்ளே சென்ற கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் கோல் ஏதும் இன்றி முதல்பாதி ஆட்டம் டிராவில் முடிந்தது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தின் 84-வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் முன்கள ஆட்டக்காரர் கொரைரோ தனது அணிக்காக முதல் கோலை அடித்தார். அதுவரை சிறப்பாக ஆடிய ஹங்கேரி அணி நிலைகுழைந்து போனது. இதை பயன்படுத்திக்கொண்ட போர்ச்சுகல் அணி தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் கிடைத்த பெனல்டி வாய்ப்பை பயன்படுத்தி ரொனால்டோ கோலாக மாற்றி யூரோ கோப்பை தொடரில் 10-வது கோலை பதிவு செய்தார்.

இதையடுத்து ஆட்டத்தின் 92 வது நிமிடத்தில் ஒன்-டூ பாஸ் மூலம் ரொனால்டோ மீண்டும் ஒரு கோல் அடித்து யூரோ கோப்பை கால்பந்து தொடரில் தனது 11 வது கோலை பதிவு செய்து அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

2004 ஆண்டு நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுகல் அணிக்காக களமிறங்கிய கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது அணியின் வெற்றிக்கு கடுமையாக உழைத்து வருகிறார். யூரோ கோப்பை கால்பந்து தொடரில் 2004ஆம் ஆண்டு கிரீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தனது முதல் கோலை பதிவு செய்தார். அடுத்ததாக அதே ஆண்டு நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார்.

தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு செக் குடியரசுக்கு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு கோலும், 2012-ல் நெதர்லாந்து அணிக்கு எதிராக இரண்டு கோலும், செக் குடியரசு அணிக்கு எதிராக ஒரு கோலும் அடித்து தனது அணியின் வெற்றிக்கு உதவினார். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் மொத்தம் 3 கோல் அடித்திருந்தார். இந்நிலையில் நேற்று ஹங்கேரிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இரண்டு கோல் அடித்ததன் மூலம் யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் அதிக போல் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இத்தொடரில் இன்னும் போட்டிகள் இருப்பதால் மேலும் பல கோல்கள் அடித்து கோல் கணக்கை உயர்த்துவார் என்று கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com