ஆஸி.-இங். 2ஆவது டெஸ்ட்: முதல்முறையாக பகலிரவு ஆட்டம்

ஆஸி.-இங். 2ஆவது டெஸ்ட்: முதல்முறையாக பகலிரவு ஆட்டம்

ஆஸி.-இங். 2ஆவது டெஸ்ட்: முதல்முறையாக பகலிரவு ஆட்டம்
Published on

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நாளை தொடங்குகிறது.

ஆஷஸ் வரலாற்றில் முதல்முறையாக பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்தப் போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 9 மணிக்குத் தொடங்குகிறது. ஆல்ரவுண்டர் மொயின் அலிக்கு, ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டிருப்பது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

மொயில் அலியால் பந்துவீச முடியாவிட்டாலும் பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையே கடந்த 1884ஆம் ஆண்டு முதல் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நடப்புத் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் நாளை நடைபெறும் 2 டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என இங்கிலாந்து அணி தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com