\
25 பந்தில் சதம் அடித்து மிரட்டிய இங்கிலாந்து வீரர்!

25 பந்தில் சதம் அடித்து மிரட்டிய இங்கிலாந்து வீரர்!

25 பந்தில் சதம் அடித்து மிரட்டிய இங்கிலாந்து வீரர்!
Published on

டி10 போட்டியில் இங்கிலாந்து வீரர் 25 பந்தில் சதம் அடித்து மிரட்டியுள்ளார். இவர் ஒரே ஓவரில் 6 சிக்சர்களும் விளாசினார்.

துபாயில், டி10 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட இருக்கிறது. இதில் இங்கிலாந்தில் உள்ள கவுண்டி அணிகள் பங்கேற்கின்றன. இதற்கு முன்னோட் டமாக நடந்த போட்டி ஒன்றில் சர்ரே - லாங்காஷைர் அணிகள் மோதின. சர்ரே அணியில் அந்த அணியின் வீரர் வில் ஜேக்ஸ் மைதானத்தில் சிக்சர் மழை பொழிந்தார். ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசிய இவர், 25 பந்தில் சதம் அடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

தொடர்ந்து விளையாடிய அவர் 29 பந்தில் 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்தின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் முன்னாள் வீரரான ஜேக்ஸ், 23 பந்திலேயே சதம் அடித்திருக்க வேண்டும். 22 பந்தில் 98 ரன் எடுத்திருந்த அவர், இரண்டு டாட் பந்துகளை சந்தித்த தால் அந்த வாய்ப்பை இழந்தார். 


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com