இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்
இந்தியாவுக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெற இருக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே அகமதாபாத்தில் நடைபெற்ற 3-ஆவது டெஸ்ட் போட்டி இரண்டே நாள்களில் முடிவடைந்தது. இதில் இந்திய அணி அபார வெற்றிப்பெற்றது. ஆனால் அகமதாபாத் பிட்ச் மிக மோசமாக தயாரிக்கப்பட்டு இருப்பதாக இங்கிலாந்து முன்னாள் வீரர்களும், இங்கிலாந்து வீரர்களும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இதே அகமதாபாத் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்கப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சருக்கு பதிலாக டான் லாரண்ஸும், ஸ்டுவர்ட் பிராடுக்கு பதிலாக டோம் பெஸ் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.