விளையாட்டு
வரலாறு படைக்குமா இந்திய அணி… இறுதிப் போட்டியில் இங்கி. பேட்டிங்
வரலாறு படைக்குமா இந்திய அணி… இறுதிப் போட்டியில் இங்கி. பேட்டிங்
மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கெதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இரு அணிகளும் அரையிறுதிப் போட்டியில் விளையாடிய அதே வீராங்கனைகளுடன் களமிறங்குகின்றன. கடந்த 2005ம் ஆண்டுக்குப் பின்னர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதால், கோப்பையை முதல் முறையாக வெல்லும் முனைப்பில் மிதாலி ராஜ் தலைமையில் இந்திய அணி களம் காண்கிறது. லீக் போட்டியில் ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தியிருக்கிறது. அதேநேரம், இந்திய அணியுடனான தோல்விக்குப் பின்னர் இங்கிலாந்து அணி அடுத்து விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இறுதிப் போட்டிக்கான டிக்கெட் அனைத்தும் விற்றுத் தீர்ந்தது.