இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: இரட்டை சதமடித்தார் அலெஸ்டைர் குக்

இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: இரட்டை சதமடித்தார் அலெஸ்டைர் குக்
இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: இரட்டை சதமடித்தார் அலெஸ்டைர் குக்

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான பகலிரவு டெஸ்ட்டில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 514 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் நகரில் நடைபெறும் இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகளின் டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் அலெஸ்டைர் குக் இரட்டை சதமடித்தார். 243 ரன்களில் அவர் விக்கெட்டை இழந்தார். சதம் விளாசிய கேப்டன் ஜோ ரூட் 136 ரன்களில் வெளியேறினார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ராஸ்டன் சேஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com