212 ரன்னில் ஆட்டமிழந்த வெஸ்ட் இண்டீஸ் - எளிதில் எட்டுமா இங்கிலாந்து?

212 ரன்னில் ஆட்டமிழந்த வெஸ்ட் இண்டீஸ் - எளிதில் எட்டுமா இங்கிலாந்து?

212 ரன்னில் ஆட்டமிழந்த வெஸ்ட் இண்டீஸ் - எளிதில் எட்டுமா இங்கிலாந்து?
Published on

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சவுதாம்டன் நகரில் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெயில், லெவிஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். லெவிஸ் 8 பந்துகளில் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 4 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்தது வெஸ்ட் இண்டீஸ். இருப்பினும், தன்னுடைய அதிரடியால் பவுண்டரிகளை விளாசினார் கெயில். 

ஆனால், 41 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து கெயில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஹோப் 11 ரன்னில் நடையை கட்டினார். இதனையடுத்து, பூரான், ஹெட்மயர் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. இருவரும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்கோர் மெல்ல மெல்ல உயர்ந்தது. 

ஹெட்மயர் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹோல்டர் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். ரஸல் வந்த வேகத்தில் இரண்டு சிக்ஸர் பறக்கவிட்டார். ஆனால், தொடர்ந்து அதிரடியாக ஆட முற்பட்டு 21 ரன்னில் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து நிலைத்து நின்று ஆடிய பூரான் 63(78) ரன்னில் ஆட்டமிழந்தார். பூரான் ஆட்டமிழந்ததும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 

வெஸ்ட் இண்டீஸ் அணி 44.4 ஓவரில் 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர், உட் தலா 3 விக்கெட் சாய்த்தனர். ரூட் இரண்டு விக்கெட் எடுத்தார். பேட்டிங் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி 213 ரன் என்ற இலக்குடன் விளையாடுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com