‘ஸ்டோக்ஸ் வாழ்வில் மறக்க முடியாத ஆட்டம்’: இங்கிலாந்து த்ரில் வெற்றி

‘ஸ்டோக்ஸ் வாழ்வில் மறக்க முடியாத ஆட்டம்’: இங்கிலாந்து த்ரில் வெற்றி
‘ஸ்டோக்ஸ் வாழ்வில் மறக்க முடியாத ஆட்டம்’: இங்கிலாந்து த்ரில் வெற்றி
Published on

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. 

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில், லபுஸ்சக்னே 74, வார்னர் 61 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் 6 விக்கெட் சாய்த்தார். 

பின்னர், விளையாடிய இங்கிலாந்து அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 67 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து அதிர்ச்சி அளித்தது. டென்லி மட்டும் 12 ரன்கள் எடுக்க, மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹாஸ்ல்வுட் 5, கம்மின்ஸ் 3 விக்கெட் சாய்த்தனர். 

ஆஸ்திரேலிய அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் 246 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் லபுஸ்சக்னே 80 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஸ்டோக்ஸ் 3, ஆர்ச்சர் 2, பிராட் 2 விக்கெட் எடுத்தனர். இதனையடுத்து, 359 ரன்கள் இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. முதல் இன்னிங்ஸில் 67 ரன்களில் இங்கிலாந்து அணி ஆட்டமிழந்திருந்ததால் 300 ரன்களுக்கு மேல் அடிப்பது கடினம் என கருதப்பட்டது. அதற்கேற்ப பர்ன் 7, ராய் 8 ரன்னில் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். 

இருப்பினும், ரூட் - டென்லி ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. டென்லி 50, ரூட் 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பிறகு பென் ஸ்டோக்ஸ் ஆட்டத்தை கையிலெடுத்தார். அவருக்கு பேர்ஸ்டோவ்(36) சற்று நேரம் ஒத்துழைப்பு அளித்தார். பட்லர், வோக்ஸ் தலா ஒரு ரன்னில் நடையை கட்டினர். விக்கெட் ஒரு முனையில் வீழ்ந்தாலும் தனி ஆளாக ஸ்டோக்ஸ் போராடினார்.  ஆர்ச்சர் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பிராட் டக் அவுட் ஆனார். 

286 ரன்களுக்கு 9 விக்கெட் வீழ்ந்துவிட்ட நிலையில் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கொண்டு 72 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஸ்டோக்ஸ் போராட்டம் வீண் ஆகிவிடும் நிலை உருவானது. அதனால், ஸ்டோக்ஸ் துணிச்சலாக அதிரடியில் இறங்கினார். பவுண்டரிகளாக விளாசினார். மறுமுனையில் லீச்சை நிறுத்திக் கொண்டது இவர் மேஜிக் காட்டினார். சிக்ஸர்களாக பறக்கவிட்டார்.

இறுதியில், 125.4 ஓவர்கள் விளையாடி 362 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றது. பென் ஸ்டோக்ஸ் 135 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி  இங்கிலாந்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. உண்மையில் ஸ்டோக்ஸ் வாழ்க்கையில் இது மறக்கமுடியாத ஆட்டம்தான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com