221 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து : ஆஸ்திரேலியா அபார வெற்றி
இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை தொடரின் 32வது லீக் போட்டி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளை இடையே நடைபெற்று வருகிறது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீசியது. இதனால் முதல் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ஆரோன் ஃபின்ச் சதம் அடித்து அசத்தினார்.மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் அரை அடித்தார். 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 285 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி கிரிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து 2வது பேட்டிங்கில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் வின்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் 0 (2) அவுட் ஆகினார். அவரைத் தொடர்ந்து நம்பிக்கை ஆட்டக்காரர் ஜோ ரூட் 8 (9) ரன்களில் வெளியேற, பின்னர் வந்த கேப்டன் மார்கன் 4 (4) ரன்களிலேயே நடையைக் கட்டினார். சிறிது நேரம் நிலைத்து விளையாடிய பேரிஸ்டோவ்-ம் 27 (39) ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து வந்த ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 89 (115) குவித்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின்னர் வந்தவர்கள் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. இதனால் 44.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது. ஆஸ்திரேலிய அணி ஜாசன் பெரெண்ட்ராஃப் 5 விக்கெட்டுகளையும், மிட்ஜெல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.