\
ஆஷஸ் 3வது டெஸ்ட் - மழையால் தாமதம்

ஆஷஸ் 3வது டெஸ்ட் - மழையால் தாமதம்

ஆஷஸ் 3வது டெஸ்ட் - மழையால் தாமதம்
Published on: 

ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்குவது மழையால் தாமதமாகியுள்ளது. 

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது போட்டி சமனில் முடிந்தது. இந்நிலையில் இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. 

லீட்ஸில் உள்ள ஹெட்டிங்க்லி நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஆனால் போட்டி தொடங்குவது மழையால் தாமதப்பட்டுள்ளது. மழை நின்றுவிட்டதால் போட்டி விரைவில் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் ஆஸ்திரேலிய அணியில், முன்னாள் கேப்டன் ஸ்மித் இடம்பெறவில்லை. காயம் காரணமாக அவர் அணியில் உள்ள வீரர்களின் பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டுள்ளார். அத்துடன் கேமரான் பேன்கிராஃபிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com