\
ஸ்மித் 25-வது டெஸ்ட் சதம் : சரிவில் இருந்து மீண்ட ஆஸ்திரேலியா

ஸ்மித் 25-வது டெஸ்ட் சதம் : சரிவில் இருந்து மீண்ட ஆஸ்திரேலியா

ஸ்மித் 25-வது டெஸ்ட் சதம் : சரிவில் இருந்து மீண்ட ஆஸ்திரேலியா
Published on

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவன் ஸ்மித் தனது 25-வது சதத்தை விளாசி அசத்தியுள்ளார்.

இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் சதமடித்திருந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸிலும் சதமடித்துள்ளார். 90 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். 

இதையடுத்து கவாஜாவுடன் ஜோடி சேர்ந்த ஸ்மித் நிதானமாக ரன்களைச் சேர்த்து வந்தார். நான்காம்‌ நாளான இன்று தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மித், டெஸ்ட் அரங்கில் தனது 25வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 356 ரன்களுடன் விளையாடி வருகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com