விளையாட்டு
டாஸ் வென்ற இங்கிலாந்து : ஆஸ்திரேலியா முதல் பேட்டிங்
டாஸ் வென்ற இங்கிலாந்து : ஆஸ்திரேலியா முதல் பேட்டிங்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் நாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. மான்ஸ்செஸ்டர் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் முதல் இங்கிலாந்து அணி டாஸ் வென்றுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
அந்த அணியில் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் இடம்பெறவில்லை. இயான் மார்கன் தலைமையில் களமிறங்கும் இங்கிலாந்து அணியில் ஜாசன் ராய் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். டி20 தொடரில் தோல்வியடைந்ததால் இந்த தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும், டி20யில் முதல் இடத்தை நழுவவிட்டதால், ஒருநாள் தொடரை முழுவதும் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இங்கிலாந்து அணியும் விளையாடுகின்றன.