இங்கிலாந்து VS தென்னாப்பிரிக்கா: தள்ளிவைக்கப்பட்ட ஒருநாள் தொடர்; காரணம் என்ன?

இங்கிலாந்து VS தென்னாப்பிரிக்கா: தள்ளிவைக்கப்பட்ட ஒருநாள் தொடர்; காரணம் என்ன?
இங்கிலாந்து VS தென்னாப்பிரிக்கா: தள்ளிவைக்கப்பட்ட ஒருநாள் தொடர்; காரணம் என்ன?

சுமார் எட்டு மாத காலத்திற்கு பிறகு பூமிப்பந்தில் கிரிக்கெட் விளையாடும் நாடுகள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த தொடங்கியுள்ளன. இங்கிலாந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் தொடர்களை நடத்தியிருந்தாலும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா மாதிரியான நாடுகள் கடந்த வாரம் முதல் தான் சர்வதேச போட்டிகளை நடத்த தொடங்கியுள்ளன.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு இந்த கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, சில தினங்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனையும் மேற்கொள்வது அவசியம் என வலியுறுத்தியுள்ளது. அதனை பின்பற்றியே இந்தியா ஆஸ்திரேலியாவிலும், வெஸ்ட் இண்டீஸ் நியூசிலாந்திலும், இங்கிலாந்து தென்னாப்பிரிக்காவிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 

இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. டி20 தொடரை இங்கிலாந்து அணி 3-0 என கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடரை விளையாட இருந்தது. இந்நிலையில் வழக்கமான கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது தென்னாப்பிரிக்க வீரர் ஒருவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானதால் முதல் ஒருநாள் போட்டியை வரும் ஞாயிறு அன்று ஒத்திவைத்துள்ளது தென்னாப்பிரிக்கா. இதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் ஒப்புக்கொண்டுள்ளது. 

அதன்படி வரும் டிசம்பர் 6, 7 மற்றும் 9 தேதிகளில் மூன்று ஒருநாள் போட்டிகளை தென்னாப்பிரிக்கா நடத்த உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com