இங்கிலாந்து VS நியூசிலாந்து முதல் டெஸ்ட் : டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு

இங்கிலாந்து VS நியூசிலாந்து முதல் டெஸ்ட் : டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு
இங்கிலாந்து VS நியூசிலாந்து முதல் டெஸ்ட் : டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு

கிரிக்கெட் விளையாட்டின் தாய் மண்ணான இங்கிலாந்தின் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இன்று விளையாட தொடங்கி உள்ளன. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். 

இரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 105 போட்டிகளில் விளையாடி உள்ளன. அதில் இங்கிலாந்து 48 போட்டிகளிலும், நியூசிலாந்து 11 போட்டிகளிலும் வென்றுள்ளன. இங்கிலாந்து அணியில் இரண்டு அறிமுக வீரர்கள் களம் காண்கின்றனர். நியூசிலாந்து அணியை பொறுத்தவரை வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு தயாராகும் வகையில் இந்த தொடரை அந்த அணி அணுகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com