சென்னையில் 2  டெஸ்ட் போட்டிகள் - இந்தியா VS இங்கிலாந்து தொடருக்கான அட்டவணை அறிவிப்பு!

சென்னையில் 2 டெஸ்ட் போட்டிகள் - இந்தியா VS இங்கிலாந்து தொடருக்கான அட்டவணை அறிவிப்பு!

சென்னையில் 2 டெஸ்ட் போட்டிகள் - இந்தியா VS இங்கிலாந்து தொடருக்கான அட்டவணை அறிவிப்பு!
Published on

வரும் 2021இல் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைக்கு உட்பட்டு பயோ பபுளில் இந்த தொடர் நடக்க உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான அட்டவணை வெளியாகி உள்ளது. 

4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 

பிப்ரவரி 5 - 9 மற்றும் பிப்ரவரி 13 - 17 வரையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளது. அதையடுத்து நடக்க உள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. அதில் முன்றாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது. 

5 போட்டிகள் கொண்ட டி20 தொடர்

மார்ச் 12 முதல் மார்ச் 20 வரையிலான தேதிகளில் ஐந்து டி20 போட்டிகள் அகமதாபாத்தில் நடத்த.திட்டமிடப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பூனேவிலும் நடைபெற உள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com