மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அங்கு நடந்த முதல் பகல் இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் 209 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.
முதலில் விளையாடிய இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 514 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 168 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி பாலோ-ஆன் பெற்றது. பின்னர், இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டின் சிறப்பான பந்து வீச்சில், 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 209 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது
முன்னதாக இங்கிலாந்து அணியின் அலிஸ்டார் குக் 243 ரன்கள் குவித்தார். அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. மொத்த போட்டியும் மூன்றே நாட்களில் முடிந்து போனது.
இந்தப்போட்டியில் தனது 384 ஆவது விக்கெட்டை வீழ்த்திய ஸ்டூவர்ட் பிராட், அதிக விக்கெட் வீழ்த்திய இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதற்கு முன்னர் இயான் போத்தம் அந்த இடத்தில் இருந்தார். பிராட்டுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார் போத்தம். இங்கிலாந்து அணியில் திக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஜேம்ஸ் ஆண்டர்சன் (492) முதலிடத்தில் உள்ளார்.