அச்சு அசல் 1992 உலகக்கோப்பை தொடரை கண்முன் கொண்டுவந்த இங்கிலாந்து -பாகிஸ்தான் அணிகள்!

அச்சு அசல் 1992 உலகக்கோப்பை தொடரை கண்முன் கொண்டுவந்த இங்கிலாந்து -பாகிஸ்தான் அணிகள்!
அச்சு அசல் 1992 உலகக்கோப்பை தொடரை கண்முன் கொண்டுவந்த இங்கிலாந்து -பாகிஸ்தான் அணிகள்!

1992ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையை போன்றே அரையிறுதி போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்து மீண்டும் வரலாற்றை திரும்ப கொண்டு வந்துள்ளன பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள்.

1992 ஒருநாள் உலகக்கோப்பை - 2022 டி20 உலகக்கோப்பை ஒற்றுமை

1992 ஒருநாள் உலகக்கோப்பை

* தொடரைவிட்டே வெளியேற இருந்த பாகிஸ்தான் அணி, 4ஆவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியை ஒரு புள்ளி வித்தியாசத்தில் பின்னுக்கு தள்ளி 4ஆவது அணியாய் அரையிறுதிக்குள் நுழைந்தது.

* 4ஆவது அணியாய் அரையிறுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்த நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் அணியாய் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது

* 2ஆவது அணியாய் அரையிறுதிக்குள் நுழைந்த இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இரண்டாவது அணியாய் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

2022 டி20 உலகக்கோப்பை

* தொடரைவிட்டே வெளியேற இருந்த பாகிஸ்தான் அணி, 4ஆவது இடத்தில் இருந்த தென்னாப்பிரிக்க அணியை ஒரு புள்ளி வித்தியாசத்தில் பின்னுக்கு தள்ளி 4ஆவது அணியாய் அரையிறுதிக்குள் நுழைந்தது.

* 4ஆவது அணியாய் அரையிறுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்த நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் அணியாய் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது

* 2ஆவது அணியாய் அரையிறுதிக்குள் நுழைந்த இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி இரண்டாவது அணியாய் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

விறுவிறுப்பாக தொடங்கப்பட்ட 1992 ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதி போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி 249 ரன்கள் எடுத்திருந்த போதிலும் இங்கிலாந்து அணியை ஆல்அவுட் செய்து 22 ரன்களில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

கிட்டத்தட்ட 1992 ஒருநாள் உலகக்கோப்பையை கண்முன்னே எடுத்து வந்திருக்கின்றன பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள், இந்த 2022 டி20 உலகக்கோப்பை அதே 1992ஆம் ஆண்டு ஸ்கிரிப்டா இல்லையா என்பதை ஞாயிறு அன்று நடைபெற இருக்கும் இறுதிபோட்டியில் தெரிந்துவிடும்.

பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோதிய டி20 போட்டிகள்

இரு அணிகளும் இதுவரை 28 டி20 போட்டிகளில் மோதி உள்ள நிலையில், இங்கிலாந்து அணி 18 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 9 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

ஆனால் பாகிஸ்தான் அணியின் அதிகபட்ச டி20 டோட்டல் ரன்கள் இங்கிலாந்து அணி எதிராக தான் வந்துள்ளது. 2021 ல் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 232 ரன்களை குவித்தது பாகிஸ்தான் அணி.

பாகிஸ்தான் அணியின் பலம்

பாகிஸ்தான் அணியின் எப்போதைக்குமான பலமாக இருப்பது அந்த அணியின் வேகப்பந்துவீச்சு தான்

இந்திய அணிக்கு பிறகு அதிக டி20 போட்டிகளை வெற்றி பெற்ற அணியாக பாகிஸ்தான் அணி தான் இருக்கிறது

ஐசிசி டாப் ரேங்கிங் பிளேயர் 2 பேர் பாகிஸ்தான் அணியில் இருக்கின்றனர்

இங்கிலாந்து அணியின் பலம்

அதிக ஆல்ரவுண்டர்கள் இருப்பது இங்கிலாந்தின் பேட்டிங்கிற்கு பலம் சேர்க்கிறது

ஹிட்டிங் ஓபனர்ஸ், ஹேங்கிங் ரோல் மிடில் ஆர்டர், கடைசியில் வந்து அடிக்கக்கூடிய ஹிட்டர்ஸ் என ஒரு டி20 போட்டியை வெல்லக்கூடிய அத்தனை கட்டங்களையும் டிக் செய்துள்ளது இங்கிலாந்து அணி

டி20 உலகக்கோப்பை இறுதி போட்டி நேரம்

2022 டி20 உலகக்கோப்பையின் இறுதி போட்டி ஞாயிறு அன்று மதியம் 1.30 மணிக்கு மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ஒருவேளை இன்றையப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தால், இறுதியில் போட்டி இன்னும் பரபரப்பாக அமைந்திருக்கும் என்பது பலரது கருத்தாக உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com