\
ஆஷஸ் கிரிக்கெட்: வெற்றியை நோக்கி ஆஸ்திரேலிய அணி

ஆஷஸ் கிரிக்கெட்: வெற்றியை நோக்கி ஆஸ்திரேலிய அணி

ஆஷஸ் கிரிக்கெட்: வெற்றியை நோக்கி ஆஸ்திரேலிய அணி
Published on

ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

பிரிஸ்பென் நகரில் நடைபெறும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 302 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 328 ரன்களும் எடுத்தன. 26 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 51 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க், ஹேசல்வுட், லியோன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, நான்காவது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்துள்ளது. பேன்க்ரோஃப்ட் 51 ரன்களுடனும், வார்னர் 60 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com