அகமதாபாத் டெஸ்ட்: இங்கிலாந்து 3 விக்கெட்டை இழந்து திணறல்

அகமதாபாத் டெஸ்ட்: இங்கிலாந்து 3 விக்கெட்டை இழந்து திணறல்

அகமதாபாத் டெஸ்ட்: இங்கிலாந்து 3 விக்கெட்டை இழந்து திணறல்
Published on

அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டம் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 74 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து போராடி வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சருக்கு பதிலாக டான் லாரண்ஸும், ஸ்டுவர்ட் பிராடுக்கு பதிலாக டோம் பெஸ் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டார்.

இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக கிராவ்லியும், சிப்லேவும் களமிறங்கினர். இதில் அக்ஸர் படேல் பந்துவீச்சில் முதலில் சிப்லே ஆட்டமிழந்தார். இதனையடுத்து நிலைத்து நின்று விளையாட முயற்சி செய்த கிராவ்லி 9 ரன்களில் அக்ஸர் படேல் சுழலில் சிக்கி அவுட்டானார். இதனையடுத்து பெரும் பலமாக இருக்கும் கேப்டன் ஜோ ரூட் 5 ரன்களில் முகமது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் சேர்த்து திணறி வருகிறது. இப்போது களத்தில் பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ விளையாடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com