ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் : புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து முதலிடம்!

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் : புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து முதலிடம்!
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் : புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து முதலிடம்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி வரும் ஜூன் மாதத்தில் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. நியூசிலாந்து அணி இறுதிப்போட்டியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. அதே நேரத்தில் இறுதி போட்டியில் விளையாட இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் போட்டி போட்டு வருகின்றன. 

இதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி தொடரின் முடிவை பொறுத்தே இறுதி போட்டியில் விளையாடும் மற்றொரு அணி எது என்பது உறுதியாகும். இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி முதல் இடம் பிடித்துள்ளது. அந்த அணி கடைசியாக விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகள் ஆறு வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகள் சமனில் முடிந்துள்ளது. 

இந்திய அணி இந்த தொடரில் எஞ்சியுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளையும் கவனத்துடன் விளையாட வேண்டும். அதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடுவதை உறுதிப்படுத்தலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com